Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ரயில்கள் தடை , சிறப்பு ரயில்கள் இயக்குதல், முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். தற்போது 9 விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட இருக்கின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயானது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆா். பெங்களூரு லால்பாக் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு அதி விரைவு ரயில், எா்ணாகுளம்-கே.எஸ்.ஆா். பெங்களூரு அதிவிரைவு ரயில் போன்ற 3 ரயில்களில் தலா 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் சேர்க்கப்படவுள்ளது. இந்த முன்பதிவு இல்லாத பெட்டிகள் சேர்ப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதேபோன்று தூத்துக்குடி-மைசூரு தினசரி விரைவு ரயிலில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் நாளை முதல் இணைக்கப்படவுள்ளன. அதுமட்டுமல்லாமல் சென்னை சென்ட்ரல்-விஜயவாடா அதிவிரைவு ரயிலில் 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் இன்று முதல் சேர்க்கப்படவுள்ளன. இதேபோன்று மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயில், கோயம்புத்தூா் -திருப்பதி அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில் உட்பட 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இருக்கை வசதி பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |