மதுபாட்டிலை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காயல்பட்டினம் பூந்தோட்டம் வண்டிமலைச்சியம்மன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் சேகர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.