இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் ரா.முத்தரசன் மத்திய அரசு, தமிழக ஊர்திக்கு குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி தராதது குறித்து பேசியிருக்கிறார்.
ரா. முத்தரசன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய அரசு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளை குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், வஉசி, வேலுநாச்சியார் மற்றும் பாரதியார் போன்றவர்களை பிற நாட்டினருக்கு தெரியாது என்று விளக்கம் கூறியுள்ளனர்.
இந்திய நாட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் ஊர்திகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லது கிடையாது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறது. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மத்திய அரசு, தமிழ்நாடு ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம்.
அப்படியும் அனுமதி கிடைக்கவில்லை எனில் மத்திய அரசு எதிர் விளைவுகளை சந்திக்கும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அரசாங்கத்தின் அணுகுமுறை நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.