Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்ளோ ஏற்பாடா?…. “பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022″…. வெளியான முக்கிய தகவல்….!!!!

வருகின்ற பிப்ரவரி 4-ஆம் தேதி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் வீரர்-வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பிரத்தியேக தானியங்கி மின்சார பேருந்துகள் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு இயக்கப்படுகிறது. இதற்கிடையே ஒலிம்பிக் கிராமம் வருகின்ற 27-ஆம் தேதி போட்டியாளர்கள் வந்ததும் அதிகாரபூர்வமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |