Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவம்…. கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபர்களை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் காவல்நிலையத்தில் தூத்துக்குடி நகர வர்த்தகர் சங்கத்தின் துணைத் தலைவரும், முள்ளக்காடு எம்.சவேரியார்புரம் வட்டார வியாபாரிகள் சங்க தலைவருமான முனிய தங்கம் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முள்ளக்காடு காந்திநகரில் உள்ள எனது வீட்டில் மணிகண்டன் என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதனை தொடர்ந்து எனது வீட்டிலிருந்து ஆட்டுக்கிடா ஒன்றும் திருட்டுப் போய்விட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து முள்ளக்காடு பஜாரில் பூட்டியிருந்த கடையை உடைத்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |