இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குப்பாண்டபாளையம் அண்ணா நகரில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாழினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் சங்ககிரியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.எட் ஆசிரியர் படிப்பு படித்து முடித்துள்ளார். அதன் பின் யாழினி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்ககிரியில் இருக்கும் கல்லூரியில் பிரிவு உபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக யாழினி தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார்.
அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்ள வேண்டாமென செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த யாழினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.