Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

துணியை காய வைத்த மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வேணி தனது வீட்டு மாடியில் துணியை காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி உரசியதால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |