இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்றின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளையும், தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது கேரளாவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 56ஆக உள்ள நிலையில், இதனை 57 ஆக உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட உயர் மட்டக் குழு முதல்வர் தலைமையில் செயல்ப்பட்டு வருகிறது. இதையடுத்து கேரளாவில் இதுவரையிலும் 40 லட்ச இளைஞர்கள் வேலைக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது