Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்?…. அமைச்சர் விளக்கம்….!!!!

கோவை மாநகராட்சி கலையரங்கில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், முதல்வர் உத்தரவின்படி இன்று கோவை மாவட்டத்தில் 2,800 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 21,60,000 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், பல பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரானை குறைக்க 100 வார்டுகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பேரூராட்சி பகுதிகளிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைகளை கொரோனா தொற்று குறையும் வரை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு முதல்வர் வரக்கூடிய காலத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து அதன்படி அரசு செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |