கொரோனா விதிமுறைகளை பொருட்படுத்தாமல் பிரதமர் இல்லத்தில் நடந்த மதுபான பார்ட்டியில் கலந்துகொண்ட போரிஸ் ஜான்சனை 5 வயது சிறுமி தனது மழலை பேச்சால் வெளுத்து வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் தலைவரான போரிஸ் ஜான்சன் பிரதமர் இல்லத்தில் நடந்த மதுபான பார்ட்டியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கலந்துகொண்டுள்ளார். இந்த தகவலை தொலைக்காட்சியில் கவனித்த 5 வயது லைலா என்னும் சிறுமி இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனை தனது மழலை பேச்சால் வெளுத்து வாங்கியுள்ளார்.
அதாவது போரிஸ் ஜான்சன் “இனி பிரதமராக இருக்கக் கூடாது” என்று அந்த 5 வயது சிறுமி கூறியுள்ளார். மேலும் போரிஸ் ஜான்சன் “இனி பிரதமர் இல்லத்திற்கு திரும்பக்கூடாது” என்று கூறிய லைலா வேறு யாராவது இங்கிலாந்து நாட்டின் புதிய தலைவராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதை வீடியோவாக பதிவு செய்த லைலாவின் குடும்பத்தினர்கள் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் லைலாவை இங்கிலாந்தின் எதிர்கால பிரதமர் என்று புகழ்ந்துள்ளார்கள்.