டெண்டர் விவகாரத்தில் என் கேள்விக்கு திமுக பதில் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “டெண்டர் விவகாரத்தில் என்னுடைய கேள்விக்கு திமுக பதில் சொல்லவில்லை. மேலும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மக்களிடம் கலந்தாலோசித்து திமுக வெளியீடு செய்ய வேண்டும். சிலர் பாதையை மாற்றி வேறு கட்சியில் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள் அவர்களையும் அழைக்கவில்லை. தினகரனையும் அழைத்து பேசவில்லை. ஜெயலலிதா இல்லாததால் எங்களை சிலர் மிரட்டி பார்க்கிறார்கள் ஆனால் அதிமுகவின் கடைக்கோடி தொண்டன் வரை யாருக்கும் பயம் என்பது கிடையாது..!!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.