தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி மிக சிறப்பாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் செவபுரம் தொகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 108 பானைகள் வைத்து பொங்கல் விடப்பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் பெருமைகளை பறைசாற்றும் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சில தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன. இவற்றை மக்கள் நம்ப வேண்டாம்…! வேலு நாச்சியார் மற்றும் வாஉசி போன்றவர்கள் தேச தலைவர்கள் இல்லை என பாஜக ஒருபோதும் கூறாது. மேலும் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் மற்றும் அவற்றில் இடம்பெற உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும்.
அந்த குழு தான் தற்போது தமிழக ஊர்தியை நிராகரித்துள்ளது. இதற்கான தெளிவான காரணம் என்னவென்று பாஜக விரைவில் அறிவிக்கும் மற்றபடி இது தென் மாநிலங்களை ஒதுக்கி வைக்க வேண்டுமென்ற எந்த எண்ணமும் பாஜக அரசுக்கு கிடையாது. மேலும் உத்தரபிரதேசத்தில் குடும்ப வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாது என்ற நிலைபாடு மற்றும் சாதி அரசியல் பாஜகவினர் செய்ய கூடாது என்ற கட்டுப்பாடும் பலரை கட்சியை விட்டு வெளியே செல்ல வைத்திருக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேச தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை…!!” இவ்வாறு அவர் கூறினார்.