நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு ஊர்களில் பல பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட 169 பேரில் 115 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நகர்ப்புற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
Categories