மும்பையில் விஷால் சுரேஷ் என்கிற அனுராக் சவன் (34) என்பவர் மேட்ரிமோனி மூலமாக சுமார் 40 பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிஏ படித்துள்ள விஷால், பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களை மேட்ரிமோனி மூலமாக கண்டுபிடித்து அவர்களுடன் நட்பாக பழகி இறுதியில் அவர்களிடம் பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது.
ஏமாந்த பெண்களில் கிட்டத்தட்ட 30 பேரிடம் லேட்டஸ்ட் மாடல் ஐபோன் வாங்கி தருவதாக கூறி விஷால் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. விஷால் மீது மோசடி வழக்கு மட்டுமன்றி பாலியல் வன்கொடுமைக்கான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நபர்களிடம் பெண்கள் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.