Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “மற்றவரிடம் பேசும்போது கவனம்”.. விமர்சனம் செய்யக் கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அனைவரையும் கவரும் விதமாக இன்று நீங்கள் பேசுவீர்கள். தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மனைவி மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருக்கும் நீங்கள் நினைத்தது சிறப்பாகவே நடந்தேறும்.

மற்றவரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். உங்கள் கருத்துக்களை கூறும் பொழுது அவர்கள் கொஞ்சம் கடுமையாக விமர்சனம் செய்யக் கூடும். ஆகையால் இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். திடீரென்று சின்ன விஷயத்திற்காக நீங்கள் கோபப்பட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக முடியும். அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களை படியுங்கள். கல்வியில் மட்டும் ஆர்வத்தை செலுத்துங்கள்.

இன்று விளையாட்டிலும் ஆர்வம் செல்லும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாக இருந்து பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |