துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவேண்டும். அளவான பணவரவு இருக்கும். மின்சார உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். இன்று நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் ஆயுதம் நெருப்பை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். இன்று கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளை பெறக்கூடும்.
புகழ் பாராட்டு வந்து சேரும். நல்ல பெயர் எடுப்பதற்காக சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பாராத உதவிகளும் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் விழிப்புடன் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். இன்று மாணவர்கள் மட்டும் கல்விக்காக கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்