Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “நீங்கள் நினைத்தது நிறைவேறும்”.. இன்று உள்ளம் மகிழும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவை  கொடுக்கும். மனதை செம்மை படுத்திக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரம் அதிகரிக்க நண்பரின் உதவி கிடைக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். இன்று நண்பர்கள் உதவியால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்ல முறையில் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் கொஞ்சம் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய என்ன படி  எல்லாமே இன்று நடக்கும்.

நீங்கள் நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கடனாக கொடுத்த பணம் மீண்டும் திரும்ப வந்துசேரும். இன்று உள்ளம் மகிழும் நாளாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். குடும்பத்திலும் ஒற்றுமை மேலோங்கும். இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |