மகரம் ராசி அன்பர்களே..!! உங்களின் எண்ணமும் செயலும் இன்று உற்சாகத்தை பெருக்கும். எளிமையானவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணவரவு நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு சலுகை இன்று அதிகரிக்கும். இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய சிறப்பான காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது ரொம்ப முக்கியம். காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும், பொருள் சேரும்.
வாகனம் வாங்க கூடிய யோகம் இன்று இருக்கும் .அதுமட்டுமில்லாமல் பழைய வீட்டை இன்று சீர் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்றையநாள் மனம் புத்துணர்ச்சியாக காணப்படும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆனால் சில காரியங்களை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. பெரியோர்களிரிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
இன்று தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்