ரவுடி பாய்ஸ் படத்திற்காக நடிகை அனுபமா 50 லட்சம் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை அனுபமா. பிரேமம் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார் மற்றும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அனுபமா தமிழில் கொடி என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் கண்ணன் இயக்கத்தில் “தள்ளிப்போகாதே” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது ரவுடி பாய்ஸ் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அனுபாமா படுகவர்ச்சியாக நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் முத்த காட்சியில் கதாநாயகனுடன் மிக நெருக்கமாக நடித்துள்ளாராம் அனுபாமா. இதற்காக அவர் ஐம்பது லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.