மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க இருக்கிறது.
மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி எந்த மருந்தையும் விற்பனை செய்ய கூடாது என்ற விதி நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியமான DTAB, குறிப்பிட்ட சில மருந்துகளை , மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்ற கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை சுகாதாரத் துறை அமைச்சகம் விரைவில் வெளியிட இருக்கிறது. இதையடுத்து வலி நிவாரணி, இருமல் மருந்து, பல் ஈறு தொற்றுக்கான மருந்துகள், ரத்தக் கசிவை நிறுத்தும் மருந்துகள், மலமிளக்கிகள் போன்றவற்றை மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்தகங்களில் வாங்க முடியும்