வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் ஜி.எம் நகரில் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது குனியமுத்தூர், துடியலூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அகமது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அகமது தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அகமதின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அகமது எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் நான் என்னுடைய குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என அகமது எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.