செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல்
தேவையான பொருட்கள் :
சிக்கன்- அரை கிலோ
எண்ணெய்- தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
தயிர்- கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – அரை டீஸ்பூன்
பூண்டு பல் – 6
கறிவேப்பிலை – 2 கொத்து
அரைக்க :
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 6
தனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை போட்டு வறுக்கவும. வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.மற்றொரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.அதன் பிறகு தாளித்தவற்றை வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.