நாட்டில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் உயர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். இவரது வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவருடைய மனைவி மல்லிகா மகன்கள் மற்றும் மருமகள்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் தொடங்கி அதிமுக நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது.
மேலும் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதை எதிர்க் கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டினார். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு இவ்வாறு செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மாபெரும் ஊழல் அரங்கேறியுள்ளது. பொங்கலுக்கு வழங்கப்பட்ட கரும்பு ஒன்றுக்கு விவசாயிகளிடம் 33 ரூபாய் கொள்முதல் விலையாக தரப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 16 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என பல விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் கொடுக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெறும் 18 பொருட்கள் மட்டுமே இருந்தது அதுவும் தரமற்ற நிலையில் காணப்பட்டது தொடர்ந்து ரூபாய் 3 ஆயிரம் கோடிக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டதாக அரசு கணக்கு காட்டியுள்ளது.
ஆனால் வெறும் 500 கோடி ரூபாய்க்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்கப்பட்டுள்ளன . மீதி பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளது .இதனை எதிர்கட்சியினர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் சுட்டிக்காட்டினார். இதனை புரிந்து கொண்ட மக்கள் எங்கே திமுகவை கேள்வி கேட்டு விடுவார்களோ …? என்ற பயத்தில் அவர்களை திசை திருப்பும் நோக்கில் திமுக அரசு இவ்வாறு லஞ்ச ஒழிப்பு நாடகம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியே முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு ரைய்டு ஆகும். திமுக அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது..!” என அவர் கூறியுள்ளார்.