Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 நாட்கள் தடைக்கு பிறகு…. திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

5 நாட்களுக்கு அனைத்து வழிபட்டு தலங்களும் திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதிலும் உள்ள வழிபட்டு தலங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை. இதனால் கடந்த 5 நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து 5 நாட்கள் தடை முடிந்து நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் நேற்று காலை முதல் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து ஆஞ்சினேயருக்கு பால், மஞ்சள் தயிர், எண்ணெய் போன்ற நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவாமிக்கு 1008 வடைகள் கொண்ட வடமாலை சாத்தப்பட்டது. இதனைதொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மிகுத்த மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

Categories

Tech |