துணை அதிபரின் அணுகுமுறை ஜோ பைடனுக்கு அதிருப்தி அளித்துள்ளதால் அவர் தலைமையிலான அரசு கமலாவை போலீஸ் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களில் புறக்கணித்துள்ளது.
அமெரிக்காவின் குடியேற்ற விவகாரம் போன்றவைகளில் துணை அதிபரான கமலா ஹரிஷின் அணுகுமுறை ஜோ பைடனுக்கு அதிருப்தி அளித்துள்ளது. இதனால் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஓராண்டு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட போலீஸ் சட்டத்திருத்தம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களில் கமலா புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் முக்கியமாக கருதப்படும் அந்நாட்டிலுள்ள அனைவருக்கும் சமமாக தேர்தலில் வாக்களிப்பதற்கு உரிமை வழங்க வேண்டும் என்ற சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கூடிய விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.
இதற்காக அண்மையில் நடந்த கூட்டத்தில் ஜோ பைடன் தலைமையிலான அரசு கமலாவிற்கு அழைப்பு விடுக்காததையடுத்து அவர் அதில் பங்கேற்கவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் பல பெருமைகளைக் கொண்டு துணை அதிபர் பொறுப்பை ஏற்ற தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறாரா என்ற கேள்வி அவருடைய ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது.