Categories
சினிமா

செம மாஸ்…. மெகா ஹிட்டான படத்தின் ரீமேக்கில் சந்தானம்…. நாளை வெளியாகும் டீசர்….!!!

நடிகர் சந்தானம் நடித்து வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிகர் சிம்புவின், “மன்மதன்” திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிம்பு தான் அவரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து தன் நகைச்சுவை திறனால்  ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார்.

அதன்பின்பு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு, கதாநாயகனாகவே நடிப்பது என்று தீர்மானித்தார். அதைத்தொடர்ந்து, ‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

சமீபத்தில் வெளியான இவரின் சபாபதி திரைப்படம், பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், சந்தானம் நடித்து தற்போது வெளியாக இருக்கும், “ஏஜென்ட் கண்ணாயிரம்” என்ற திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இத்திரைப்படம், தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேய என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

Categories

Tech |