நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த நிலையில், அவரைப் பற்றிய பழைய விஷயங்களை எல்லாம் இணையதளங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். இருவரும் தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டு தங்கள் பணிகளை பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனினும், இணையதளவாசிகளும், மக்களும் ஏன்? எதற்காக? என்று அதனை நோண்டி வருகிறார்கள். அதன்படி, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை காதலித்த போது அவரின் வாழ்க்கையில் இருந்த பெண்கள் பற்றி பேசப்பட்டு வருகிறது. ஒரு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு வாரிசு நடிகையுடன் இணைந்து நடித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த நடிகை, நான் இனிமேல் தனுஷுடன் தான் வாழ்வேன் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு, ரஜினிகாந்த் அந்த நடிகையின் தந்தையிடம் பேசி இந்த பிரச்சனையை முடித்து வைத்திருக்கிறார். அதன் பிறகு, மற்றொரு பிரபல நடிகைக்கும் தனுசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அந்த நடிகை, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்திவிட்டார். அதற்கு காரணம் தனுஷ் தான் என்று அப்போது பரவலாக கூறப்பட்டு வந்தது. மேலும், பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை, தன் காதல் கணவரை பிரிந்தார். அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டதற்கும் முக்கிய காரணம் தனுஷ் தான் என்று கூறப்பட்டது. இவ்வாறாக தனுஷின் வாழ்வில் வந்த நடிகைகள் பற்றி இணையதளங்களில் பேசப்பட்டு வருகிறது.