Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! இதோ ரெடியாகிட்டு “புதிய தலைநகரம்”…. பட்ஜெட் எவ்ளோனு தெரியுமா…? வெளியான அதிரடி தகவல்….!!

இந்தோனேஷியா 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் புதிய தலைநகரை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்தா முழுவதும் வருகின்ற 2050 ஆம் ஆண்டிற்குள் கடலில் மூழ்கி விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தோனேஷிய அரசாங்கம் 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் நுசாந்த்ரா என்னும் புதிய தலைநகரை வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய பட்ஜெட்டிற்காக இரண்டரை லட்சம் ஹெக்டர் நிலங்களை அரசு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புதிய தலைநகரம் பல நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளின் இருப்பிடமாக இருக்குமென்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |