பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் நேற்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனையும் நடத்தியது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்குவதற்கு விஜய் தரப்பில் பச்சை கொடி காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் பயங்கர சந்தோஷத்தில் உள்ளனர்.
இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த இடங்களில் போட்டியிடலாம் ? யார் யாரையெல்லாம் வேட்பாளர்களாக களம் இருக்கலாம் ? என்று தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.