Categories
அரசியல் மதுரை

திருமலை நாயக்கரா? திருவள்ளுவரா?…. “பாவம் அவரே கன்ஃபியூஸன் ஆயிட்டாரு!”…. பிரஸ் மீட்டில் கலகல….!!!!

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் பல கட்சியினரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு “உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்தப்பட்ட வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மஹாலை பார்வையிட்டார். அப்போது இவ்ளோ பெரிய மஹாலை கட்டிய இந்த மன்னருக்கு இங்கு சிலை இல்லையா ? என்று கூறி இங்கே இந்த திருவள்ளுவர் சிலையை நிறுவினார்” என்று கூறினார்.

அதனை கேட்டு கட்சியினரும், பத்திரிகையாளரும் கலகலவென்று சிரித்தனர். ஆனால் செல்லூர் ராஜு எதற்கு சிரிக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் அடுத்ததாக குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட விஷயத்தை பற்றி பேச தொடங்கினார்.

Categories

Tech |