மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பாம்பு நுழைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் தரைதளத்தில் கருவூலக மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விடுமுறை முடிந்து கருவூலக மையத்திற்கு ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது பாதுகாப்பு அறைக்கு அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த அலுவலகம் முழுவதும் தேடியும் பாம்பு கிடைக்கவில்லை. ஆனால் பாம்பு சட்டை மட்டும் கிடைத்தது. ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் பாம்பு இங்கிருந்து சென்றிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.