செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 வகை பொருட்கள் கொடுப்பதாக அறிவித்து தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளங்களிலும், அதேபோல சில ஊடகங்களிலும் எந்த அளவிற்கு இந்த பொங்கல் பரிசு பொருட்களை மக்கள் அதை வெறுத்து தூக்கி கொட்டினார்கள். பொதுவாக பொங்கல் பரிசு என்பதை விட அது மொத்தமாக ஒரு குப்பையை தான் கொடுத்தார்கலொழிய பொங்கல் பரிசு கொடுக்க வில்லை.
உருகிய வெல்லம், மிளகு என்ற பெயரிலே பருத்தி கொட்டை அதேபோன்று கலப்பட மஞ்சள், கலப்பட சீரக தூள், பல்லி பதுங்குமிடம் புளி, பிளாஸ்டிக் கவர் இப்படி குப்பைகளாக 21 பொருட்களை கொடுத்து, தமிழ்நாட்டு மக்கள் இந்த திமுக விடியல் அரசை கேவலமாக பேசி வந்து விமர்சனம் செய்கின்ற நிலையிலே அதை திசை திருப்ப வேண்டும். அதை திசை திருப்பி மக்கள் மத்தியிலே அதை மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக புது புது யுக்திகளை இந்த திமுக அரசு கையாண்டு கொண்டிருக்கின்றது.
பழமொழி ஒன்று சொல்லுவார்கள்… சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்ற வகையிலே இன்று ரெய்டு என்ற போர்வையும், காவல் துறையை ஏவிவிட்டு கழகம் ஏற்படுத்துகின்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நற்பெயரிற்கு எந்த ஒரு கொம்பனாலையும் கழகம் விளைவிக்க முடியாது. மக்கள் மத்தியிலும் சரி இன்றைக்கு நாங்கள் சொல்லுகின்றோம் என தெரிவித்தார்.