Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. இதுவரை இல்லாத புதிய உச்சம்…. சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருந்தாலும் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இது மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,45,796 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 39 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்ததால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,112 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே மக்களுக்கு சற்று நிம்மதி தரும் செய்தியாக 19,978 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,79,205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |