அவரைக்காய் கூட்டு
தேவையான பொருட்கள் :
அவரைக்காய்- கால் கிலோ
வெங்காயம் -4
மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல்- 1 கப்
எண்ணெய்- தேவைக்கேற்ப
கறிவேப்பிலை -1 கொத்து
தண்ணீர்-தேவைக்கேற்ப
உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை :
அவரைக்காயையும், வெங்காயத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய அவரைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் வெங்காயம், மஞ்சள் தூள், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அத்துடன் அவரைக்காய் கலவையை சேர்த்து கிளறிவிட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய் வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
சுவையான அவரைக்காய் கூட்டு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்.