Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழக ஊர்த்திக்கு அனுமதி மறுப்பு…. மத்திய அரசை கண்டித்து…. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி தர மறுத்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு வீரகேரளம்புதூர் தாலுகா செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் நிர்வாக குழு உறுப்பினர் பரமசிவன், தொழிற்சங்க தாலுகா தலைவர் கிட்டப்பா, ஆட்டோ சங்க தலைவர் ஜெகன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |