Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1,50,700…. கட்டாயம் விதிக்க வேண்டும்…. ஆட்சியரின் உத்தரவு….!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் கலெக்டர் அமர்குஷ்வாஹா அனைத்து துறை அலுவலர்களுக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாத நபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இம்மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக 5 பேருக்கு மொத்தமாக 2,500 ரூபாய் அபராதமும், காவல்துறையின் சார்பாக 500 பேருக்கு மொத்தமாக 1,01,200 ரூபாய் அபராதமும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 53 பேருக்கு 37,000 ரூபாய் அபராதமும், வருவாய்த் துறையின் சார்பாக 20 பேருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் என மொத்தம் 581 நபர்களுக்கும் 1, 50, 700 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |