Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்…. தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான பணி மூப்பு முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்ததால் திறமையுள்ளவர்கள் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்று பணிக்கு வருபவர்களுக்கு உயர் பதவிகளே கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அரசு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பணிமூப்பு, பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதிகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட விதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த பல தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதிப்பதாக கூறி மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு பணியாளர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் விசாரணை செய்த நீதிமன்றம் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, மதிப்பெண் மற்றும் பணிமூப்பு முறையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

இதனைதொடர்ந்து நீதிமன்ற உத்தரவை 12 வாரங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தாமேலே இருந்து வந்தது. ஆகவே உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கொரோனா காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளித்தது. தமிழக அரசு உயர் அதிகாரிகள் இனிமேல் இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பை செய்யக்கூடாது. எனவே டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Categories

Tech |