Categories
தேசிய செய்திகள்

நான் தடுப்பூசி போட மாட்டேன்…. பணியாளரை தாக்கிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொற்று வேகமாக பரவி வரும் சூழலைப் புரிந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை ஏராளமான மக்கள் விரும்பி செலுத்தி கொள்கின்றனர் என்று மத்திய அரசானது அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்துவதற்கு சிலர் தயங்குகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் பல்லியா நகரில் 2 பேர் வெவ்வேறு சம்பவங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அந்த வரிசையில் படகோட்டும் நபர் ஒருவர் சுகாதார பணியாளரை கண்டதும் தடுப்பூசியை நான் செலுத்திக் கொள்ளமாட்டேன் என்று கூறியதுடன், சில வினாடிகளில் படகிலிருந்து குதித்து சுகாதார பணியாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேலும் தண்ணீருக்குள் வீசி விடுவேன் என்று கூறியும், அந்தப் பணியாளரை நீருக்குள் இழுத்துச் செல்லவும் முயற்சி செய்துள்ளார். இதையடுத்து ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவரை சமாதானம் செய்து பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த செய்துள்ளனர். இதேபோன்று இன்னொருவர் வேறொரு சம்பவத்தில் எனக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பின்னர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமலிருக்க ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். பின்னர் பணியாளர்கள் அவரிடம் கெஞ்சி கூத்தாடி கீழே இறங்கி வர கூறியுள்ளனர். இதையடுத்து அவர் கீழே இறங்கி வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Categories

Tech |