Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அம்மு”- வின் குறும்புத்தனம்…. பாசமாக பழகும் குட்டியானை…. ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

பாகன்களுடன் பாசமாக பழகும் குட்டி யானையின் குறும்புத்தனத்தை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து முகாமில் வைத்து பயிற்சி அளித்து அதனை வனத்துறையினர் கும்கியாக மாற்றுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிறந்து 20 நாட்களே ஆன குட்டி யானை தாயை பிரிந்து தவித்தது. இந்த குட்டி யானையை வனத்துறையினர் முதுமலை முகாமிற்கு கொண்டு வந்து பராமரித்து வருகின்றனர்.

இதனை பராமரிப்பதற்காக பொம்மன் என்பவரது தலைமையில் பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குட்டி யானை பாகங்களுடன் பாசமாக பழகுகிறது. இதனால் குட்டி யானைக்கு பாகன்கள் அம்மு என பெயரிட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, அம்மு என்ற குட்டியானை செய்யும் அனைத்து குறும்புகளையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |