சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே ஒரு குடும்பத்தினர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இந்நிலையில் கட்டுமான பணியை வீட்டு உரிமையாளரின் மனைவி அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். அவருக்கு 4 வயது மகளும் உள்ளார். இந்நிலையில் அந்த பெண் வீடு கட்டுமான பணியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டால் தனது மகளிடம் அருகில் உள்ள முதியவர் வீட்டிற்கு சென்று பாட்டிலில் தண்ணீர் வாங்கி வரும்படி கூறினார்.
அப்போது முதியவர் அந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு சிறுமியின் தாய் ஓடிவந்து பார்த்த போது முதியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் முதியவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து முதியவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதியவர் ரவீந்திரனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.