மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நகை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குன்னம்பாறை பகுதியில் பத்மனாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மனாபன் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கடையிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பத்மனாபன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பத்மநாபன் பலத்த காயமடைந்தார்.
இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் பத்மனாபனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பத்மனாபனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பத்மனாபன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.