Categories
மாநில செய்திகள்

OMG: வேலை தேடும் இளைஞர்கள் அலர்ட்…. தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அந்த சூழலில் பலர் வேலைவாய்ப்பு இன்றி இருந்தாலும் கொரோனா இரண்டாம் நிலைக்கு பின்னர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மர்ம கும்பல் ஒன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் முத்திரையுடன் விண்ணப்பங்களை பயன்படுத்தி போலியாக நேர்முகத்தேர்வு நடத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் வந்துள்ளது.

அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையில் திருப்பத்தூரை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மர்ம கும்பல் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது. மேலும் இந்த கும்பலை போலவே சிலர் தமிழகத்தின் பல மாவட்டங்களில் போலியாக நேர்முகத்தேர்வு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி நேர்முகத் தேர்வு நடத்துவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவசர போலீஸ் 100 மற்றும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |