இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் அர்ச்சனாவின் திருமணம் நடைபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அர்ச்சனா மணிகண்டனின் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அர்ச்சனாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அர்ச்சனா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.