வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு பர்மா காலனியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இளையராஜா போதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளையராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.