Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயரிங் வேலை நடந்த போது…. போலீஸ்காரருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் செல்ல மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு திவ்யா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மகேந்திரனின் வீட்டில் வயரிங் வேலை நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது.

இதனால் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |