தலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரமான குளிர் நிலவி வருகிறது. டெல்லி சத்தாரா சிவபுரி என்ற இடத்தில் ராதா என்ற பெண் தன் கணவருடன் 4 குழந்தைகளோடு வாடகைக்கு வசித்து வருகிறார். காலையில் அவர்களது வீடு வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, ராதாவும் அவரின் 4 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை சோதித்து பார்த்ததில் ராதா உட்பட 4 பேர் உயிரிழந்திருந்தனர். அதில் கடைசி குழந்தை மட்டும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தது. உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த குழந்தையின் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றால், வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அப்போது குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டு ஜன்னல் உட்பட அனைத்தையும் முழுமையாக அடைத்து விட்டு அடுப்பை பற்ற வைத்துவிட்டு 5 பேரும் தூங்கியுள்ளனர். ஆனால் ஸ்டவ் அதிக நேரம் எரிந்ததால் வெளியான நச்சுப்புகை வெளியேற வழியில்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தது.இதனால் 5 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிறந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.