உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கண்டறிய ஆர்.டி.ஏ மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை உள்ளிட்ட முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே விஞ்ஞானிகள் வேறு சில வழிமுறைகளின் மூலம் எளிய முறையில் கொரோனா தொற்று பரவலை கண்டறிவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா பரவலை எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தி கண்டறியும் வழிமுறையை ஸ்காட்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் 98% கொரோனா பரிசோதனை துல்லியமாக இருப்பதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.