Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்க மகனையும் மருமகளையும் சேத்து வைங்க!”…. தனுஷ் விவாகரத்தில்…. புதிய சர்ச்சை….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வப்போது சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் வசித்து வரும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் ஏற்கனவே தனது மூத்த மகன் கலையரசன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது காணாமல் போனதாகவும், சினிமாவில் தனுஷ் நடிப்பதை பார்த்து விட்டு அவர் தான் தன் மூத்த மகன் எனவும் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவமானது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தொலைக்காட்சி செய்தி மூலம் தனுஷின் விவாகரத்தை அறிந்த இந்த தம்பதியினர் தனது மகனையும், மருமகளையும் சேர்த்து வைக்க ரஜினி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஐஸ்வர்யா-தனுஷ் இருவரும் பிரிவதற்கான காரணம் என்ன ? என அனைவரும் பரபரப்பாக பேசி கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் இந்த சர்ச்சை தம்பதியினர் ரஜினியிடம் தனது மகன் மற்றும் மருமகளை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |