Categories
அரசியல்

“என் பிள்ளைகளின் ஹோம் ஒர்க்…. இன்னும் நான் ஹெல்ப் பண்றேன்”…! பிரியங்காவின் தாய் பாசம்…!!!!

தன்னுடைய பிள்ளைகளின் ஹோம் ஒர்க்கில் இன்னமும் உதவுவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

உத்தர பிரதேச தேர்தல் களத்தில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா காந்தி. அவருடைய தேர்தல் யோசனைகள் யுத்திகள் மற்றும் பிரச்சாரம் அனைத்தும் பெண்களை மையமாக வைத்தே உள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் வாக்காளர்களுக்கு மத்தியில் ஃபேஸ்புக் லைவ் சேட்டில் உரையாற்றினார் பிரியங்கா. அப்போது அவர் கூறியதாவது, “எத்தனை வேலைகள் இருந்தாலும் சரி அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு என் பிள்ளைகளின் படிப்பில் நான் கவனம் செலுத்துவேன்.

அவர்களுக்கு அசைன்மென்ட் இருந்தால் அதை என்னை தான் சரிபார்க்க சொல்வார்கள்..! நானும் சரி பார்த்து கொடுப்பேன். மேலும் இதை ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கிய சொத்து மற்றபடி அனைத்து வேலைகளும் இரண்டாவது பட்சம் தான்.” என அவர் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது. பிரியங்காவின் இந்த பேச்சுக்கு அனைத்து தரப்பு மக்களும் வெகுவான பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். “ஒரு பிஸியான அரசியல்வாதியாக இருந்தாலும் கூட பிள்ளைகளின் கல்வியில் இவ்வளவு ஈடுபாட்டோடு இருக்கிறாரே..?” என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |