உத்திரபிரதேசத்தில் எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பாஜக கொஞ்ச கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெருப்பு பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கட்டவ்லி தொகுதி பாரதிய ஜனதா எம்எல்ஏ அந்த பகுதியிலுள்ள ஒரு கிராமத்துக்கு ஓட்டு கேட்டு சென்றிருந்தார் அப்போது கிராம மக்கள் எம்எல்ஏ விக்ரம் சிஙகிற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு வருடமாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர் இதில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதனால் பாஜக மீது மக்கள் கோபத்தில் இருப்பதால் பாஜக எம்எல்ஏவை ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி அடிக்கடி பரபரப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் “இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பவர்கள் மீது குண்டு போடுவேன்” என கூறினார் .மேலும் இந்தியா ஒரு ஹிந்துஸ்தான் நாடு என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.